Fetching
நாங்கள் தயாரிக்கும் எண்ணெய் வகைகள் அனைத்தும் மரச்செக்கு இயந்திரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டவை ஆகும். எங்களது மரச்செக்கின் உலக்கை வாகை மரம் மற்றும் உரல் கல்லால் ஆனது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கும் போது எண்ணெய் சூடாகாமல் இருக்கும். மேலும் பயன்படுத்தும் வித்துக்களின் சத்துக்களும் முழுமையாக அப்படியே இருக்கும். இந்த மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவது உடலுக்கு நன்மைகளையே விளைவிக்கும்.
நமது பாரம்பரிய அரிசிகளில் பல சிறப்புகள் மற்றும் தனித்துவத் தன்மைகள் நிறைய இருக்கின்றது. இச்சிறப்பு மிக்க அரிசிகளின் பயன்கள் மற்றும் மகத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், அதன் நன்மைகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் எங்களை இந்த உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது.
பொதுவாக இந்த பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தி எந்த ஒரு உணவு தயாரிக்க வேண்டுமானாலும் அரிசியை குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை தவிர்க்கும் விதமாக எங்களது Ready Mix Items மூலம் உடனடியாக 15 நிமிடத்தில் தயாரிக்க இயலும்.
எங்களது உற்பத்தி பொருட்கள் அனைத்தும் மிக விரைவாகவும், எளிமையாகவும் சமைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது.